Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடனேயே இயங்கி கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

காமடி செண்ட்ரலுக்கான 'The Daily Show' நிகழ்ச்சியில் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் ஈராக்கில் யுத்தத்தை முடித்துள்ளோம், ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை முடித்துள்ளோம். அல் கைதாவின் மூத்த தலைவர்கள் பலரை அழித்துள்ளோம். எனினும் அல் கைதாவினர் இன்னமும் பலமாகவே இயங்கிவருகின்றனர் என்பது உண்மை. அவர்கள் வட ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் தொடர்ந்து துடிப்புடன் செயற்பட்டுவருகின்றனர் என ஒபாமா தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவுக்கு எப்போதும் முதல் எதிரியாக அல் கைதாவினர் உள்ளனர். இதனாலேயே அல் கைதாவுடன் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பேற்றதிலிருந்து அல் கைதாவினரின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்டுவருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றையும் நிறைவேற்றியுள்ளார். ஆனால் அல் கைதாவினரால் ஆபத்து இன்னமும் தொடர்கிறது என வெள்ளை மாளிகை ஊடக பேச்சாளர் ஜேய் கார்னேய் தெரிவித்துள்ளார்.

0 Responses to அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடன் இயங்கிவருகின்றனர் என்பது உண்மை: ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com