இலங்கையில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து கொண்டிருந்த போது, ஐநாவின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழு அறிக்கை தற்போது
ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம்
சுமத்தியுள்ளது.
எகிப்தை சேர்ந்த தொராயா ஒபெய்ட் எனும் உயர் அதிகாரியை இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இவ்விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நான்கு மாத காலக்கெடுவை விதித்து அதற்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பான் கீ மூன் கோரியுள்ளார். எனினும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவரால் அந்த பணியை செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சார்லஸ் எனும் மற்றுமொரு உயர் அதிகாரி அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும் குறிப்பிட்ட கால எல்லை முடிவடைந்து 9 மாதங்களான பின்னர் இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இது குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, விரைவில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என பதில் வந்துள்ளது.
அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ள போதும் இன்னமும் வெளியிடப்படாது இழுத்தடிப்பு செய்வது, தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் வேண்டுமென்றே ஐ.நா இந்த அறிக்கையை மறைக்கப்பார்க்கிறதா எனவும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக இலங்கையின் இறுதி யுத்தம் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் குழு தயாரித்த நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது அதில் கூறப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்திருந்ததுடன், தமது நல்லினக்க ஆணைக்குழுவை கொண்டு வெளியிட்ட அறிக்கை படி தாம் தற்போது நடந்து வருவதாக தெரிவித்துவருகிறது. இதனால் ஐ.நாவின் குறித்த போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

0 Responses to இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மறைக்க பார்க்கும் மற்றுமொரு அறிக்கை?