பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த இலங்கை அகதிகள்
60 பேரில், நீதிமன்ற உத்தரவை அடுத்து இறுதி நேரத்தில் 12 பேர்
விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடுகடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதுடன், அவர்களுக்காக வாதாடிய சட்டத்தரணிகள், மற்றும் 12 சட்ட அமைப்புக்கள் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளன.
இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்தரவதை, உயிர் அச்சுறுத்தல் ஆபத்து இருப்பதாக சட்டத்தரணிகள் வாதாடியிருந்தனர்.
டன்கன் லெவிஸ் அமைப்பின் சட்ட ஆய்வாளர் தௌஃபிக் ஹுசைன் தெரிவிக்கையில், ஏற்கனவே இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டவர்களில் இரு அகதிகள், இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானதுடன், மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததை ஆதாரத்துடன் நீதிமன்றில் நிரூபித்தோம். இதையடுத்து தற்போது நாடுகடத்தப்படவிருந்த மூன்று இலங்கையர்களை எம்மால் காப்பாற்ற முடிந்தது என தெரிவித்துள்ளார்.
'அனைத்து இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு அவசியமானது என கருதவேண்டியதில்லை' என ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய குடிவரவு திணைக்களம், பாதுகாப்பு உண்மையில் தேவை என கருதுபவர்களை நாம் இங்கிருந்து ஒரு போதும் அனுப்புவதில்லை. மாறாக, குறித்த நபர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவையில்லை என கருதுபவர்களையே நாம் திருப்பியனுப்புகிறோம் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இலங்கைக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் குடிவரவு தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.

0 Responses to நாடு கடத்தப்படுவதிலிருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட இலங்கை அகதிகள்