உள்ளூர் வாசிகள் முதல், வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வரை அனைவரையும்
பொதுவாக அதிகம் கவர்ந்துள்ள மதுரை மல்லிக்கு மத்திய அரசின் புவிசார்
குறியீடு கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு, காஞ்சீபுரம் பட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு இவைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது போல மதுரை மல்லிக்கும் புவிசார் குறியீடு வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாத பட்சத்தில் வரும் ஜனவரி மாதமே புவிசார் குறியீடு கிடைத்து விடும் என்றும் தெரிகிறது.
இதனால் மதுரை மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மல்லியின் சிறப்புக்களாக இவர்கள் கூறுவது, மதுரை மல்லியின் மனம், நீண்ட காம்பு, விரைவில் மலராத தன்மை, அழுத்தமான மல்லியின் இதழ்கள், மூன்று நாட்களுக்குப் பின்னரே மதுரை மல்லி முழுமையாக வாடும் என்பதால், குளிரூட்டப் பட்ட பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம் போன்ற சிறப்புக்களால் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீட்டு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த புவிசார் குறியீடு கிடைத்தால், விவசாயிகள், வியாபாரிகள் கூடுதலாக பயன் அடைவார்கள் என்றும் தெரிகிறது.

0 Responses to மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு