Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒசாமாவுக்கு பின்னர்  அல்-கைதாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட, அல்-ஷவாகிரி பாகிஸ்தனிலேயே பதுங்கியிருக்கலாம் என வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவல் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்தியாஷ் குல் எனப்படும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் எழுதிய ''Pakistan: Before and After Osama'' எனும் புத்தகத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் அமெரிக்கப் படையினரின் மிக முக்கிய குற்றவாளியாக பின் லேடன் தேடப் பட்டு வந்தது போன்றே ஷவாஹிரியின் மறைவிடமும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்களின் முக்கிய இலக்கு ஆகும். இத்தகவலை ஊகித்து வெளியிட்டதன் காரணத்தால் இம்தியாஷ் குல் எனும் இந்த எழுத்தாளரும் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம் எனக் கருதப் படுகின்றது.

ஷவாஹிரியின் மறைவிடம் குறித்து பதியப்பட்ட இப்புத்தகத்தில் மேலும் குறிப்பிடப் பட்ட விவரங்களில் பாகிஸ்தானில் நிம்மதியாக அரச படைகளின் அச்சுறுத்தல் அற்ற நகரம் ஒன்றில் இவர் பதுங்கியிருக்கலாம் எனவும் இஸ்லாமாபாத்தை கைப் பற்றுவது இவரது திட்டமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருடம் மே மாதம் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஷா கிலானி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் ஷவாஹிரியின் இருப்பிடம் பாகிஸ்தான் அல்ல என மறுப்புரை தெரிவித்திருந்தார்.

எனினும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் மே 7 ஆம் திகதி இந்தியாவுக்கு மேர்கொண்டிருந்த 3 நாள் சுற்றுப் பயணத்தின் போது கல்கத்தாவில் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் ஷாவாஹிரி பாகிஸ்தானில் தான் பதுங்கியுள்ளான் எனவும் அல்கொய்டா இயக்கம் எங்கிருந்தாலும் அதை முற்றாகச் செயலிழக்கச் செய்வதே அமெரிக்காவின் இலக்கு எனவும் கூறியிருந்தார்.

கடந்த 2011, மே 2ம் திகதி பாகிஸ்தானின் அபோத்பாத் நகரில் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப் பட்டதை அடுத்து  அல்-கைதாவின் புதிய தலைவராக அல்-ஷவாகிரி பொறுப்பேற்றுக்கொண்டார்.

0 Responses to அல்-கைதா புதிய தலைவர் பாகிஸ்தானிலேயே பதுங்கியுள்ளார்: சொல்கிறது புதிய புத்தகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com