Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஓய்வூதிய திட்டம், மற்றும் காப்பீட்டுத் திட்டத்திலும் அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும், மத்திய அமைச்சரவைக் குழு, பிரதமர் தலைமையில் கூடி முக்கிய விஷயங்கள் பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். நேற்றைய கூட்டத்தில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 26 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும், காப்பீட்டுத் துறையில் இருந்த 26% சதவிகிதத்திலிருந்ததை, 49%  சதவிகிதமாக உயர்த்தியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனினும் இவை,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்துக்கு உட்படுத்தப் பட்டு பின்னர்தான் நிறைவேற்ற முடியும் என்பதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குப் பின்னர்தான் நடைமுறைக்கு அமுல் படுத்தப்பட சந்தர்ப்பம் உள்ளது. எனினும் இதற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்று கம்யுனிஸ்ட் உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகளும், பாஜகவும் இப்போதே போர்கொடி உயர்த்தி வருகின்றன.

     ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத்  திட்டத்தில் அந்நிய முதலீடு இவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவது  நாட்டின் இரண்டாவது பொருளாதார சீர்திருத்தமாக அமைகிறது.

இவ்விரு திட்டங்களிலும் அந்நிய முதலீடு செய்யப்படுவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யவும், காப்பீட்டு துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் பல பயனடையவும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை வலியுறுத்த்தி மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல அதிரடி மாற்றங்களை அண்மைக்காலமாக மேற்கொண்டுவருகிறது. சில்லறை வணிகம், விமானத்துறை, தகவல் ஒளிபரப்பு துறை என்பவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தற்போது காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டத்திலும் அந்நிய முதலீட்டுக்கு அதிக முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளது. 

0 Responses to காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதிய திட்டத்திலும் அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com