Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் Massachusetts மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள 'Nashua' உயர் கல்லூரியில் கல்வி கற்று வரும் 14 வயதேயான 'தீபிகா குருப்' எனும் இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் Discovery Eduction 3M young scientist challenge எனப்படும் அமைப்பு நிகழ்த்திய இளம் விஞ்ஞானிகளுக்கான தேர்வுப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது, அசுத்தமான தண்ணீரை சூரிய சக்தி கொண்டு சுத்தப் படுத்தி தூய குடி நீராக்க உதவும் சிறந்த ஒரு கருவியை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறையாக  இருந்தது. இதில் தீபிகா குருப் உருவாக்கிய கருவியே சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அவருக்கு அமெரிக்காவின் நம்பர் ஒன் இளம் விஞ்ஞானி என்ற பட்டத்துடன் $ 25 000 டாலர்கள் பரிசாக வழங்கப் பட்டுள்ளது.


உலகம் முழுதும் சுமார் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான நீரைப் பாவிக்க இயலாதவர்களாக உள்ளனர். இதனால் தீபிகாவைத் தேர்வு செய்த நடுவர்கள், அவர் கண்டு பிடித்த விலை குறைந்த கருவி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தண்ணீரை சுத்தப் படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கருத்துரைத்துள்ளனர்.

தீபிகா கண்டுபிடித்த கருவியில் முக்கியமாக இரு இரசாயனங்கள் பாவிக்கப் படுகின்றன. அவை, டைட்டானியம் ஒக்ஸைட்டு மற்றும் ஷிங்க் ஒக்ஸைட்டு என்பவையாகும். இவை சூரிய ஒளி படும் போது ஹைட்ரோக்ஸைல் ராடிக்கல்ஸ் எனப்படும் பதார்த்தத்தை உருவாக்குகின்றன. இப் பதார்த்தம் அசுத்தமான தண்ணீரிலுள்ள குறிப்பிட்ட பேக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் தன்மையுடையது ஆகும்.

சுமார் 9 இறுதிச் சுற்று மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தீபிகா தனக்கு இக்கருவியை உருவாக்குவதற்குத் தூண்டுதல் தான் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணம் எனவும் இதன் போது தூய குடிநீர் இல்லாமல் மக்கள் படும் அவஸ்தைகளைத் தான் காண நேரிட்டதும் தான் எனக் கூறுகின்றார்.

இதேவேளை இன்னொரு இந்திய வம்சாவளி மாணவனான நரேன் கௌராவ் இப்போட்டியில் 6 ஆவது இடத்தை பெற்றதுடன் $ 1000 டாலர்கள் சன்மானமும் பெற்றுள்ளார். அமெரிக்காவில் கல்வி கற்று வரும் இந்திய மற்றும் ஆசிய வம்சாவளி மாணவர்கள் சில இடங்களில் அங்குள்ள அமெரிக்கர்களை விட கல்லூரியில் அதிக புள்ளிகளைப் பெறுவதுடன் ஏனைய அமெரிக்க பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினரை விட அதிகம் சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


 

0 Responses to இந்திய வம்சாவளி மாணவிக்கு அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி விருது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com