Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒபாமாவுக்கு தனது 2 ஆவது பதவிக் காலத்தில் உருப்படியான செயற்திட்டம் எதுவும் கிடையாது என மிட் ரூம்னி தனது பிராச்சார பேரணியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற பிரச்சாரப் பேரணியின் போது, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரூம்னி அமெரிக்க அதிபரும் தனது போட்டியாளருமான ஒபாமாவை ஏளனப் படுத்தி சில கருத்துக்கள் கூறியிருந்தார்.

ஒபாமா மறுபடியும் அதிபராகத் தேர்வானால் அவர் தனது அலுவலக அறையில் மேற்கொள்வதற்கு உருப்படியான செயற்திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என அவர் கூறியிருந்தார். மேலும் ஒபாமாவின் பிரச்சாரங்கள் சிறிய தாக்குதல்கள் மற்றும் வார்த்தை ஜாலத்துக்கு மட்டுப் படுத்தப் பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஆனால் ரூம்னி பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒபாமா உரையாற்றுகையில், தேர்தல் திகதி நெருங்கி வருவதால் ரூம்னி தனது கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் அடிக்கடி மாற்றி வருகின்றார் எனவும் குடியரசுக் கட்சி 'Romnesia' ஆல் பீடிக்கப் பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.

ஒபாமா, ரூம்னி ஆகிய இருவரும் எதிர்வரும் திங்கட்கிழமை புளோரிடாவில் தமது இறுதி விவாதத்தின் போது வெளிநாட்டுக் கொள்கை (Foreign policy ) பற்றிப் பேசவுள்ளனர்.

ரூம்னியும் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களும், சமீபத்தில் லிபியாவில் கொல்லப் பட்ட அமெரிக்க தூதுவர் உட்பட 4 அமெரிக்கர்களின் சாவுக்கு ஒபாமா தலைமையிலான நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டை மறுபடியும் அழுத்தமாக விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் முன்னால் அதிபர் பில் கிளிங்டன் வெள்ளிகிழமை 'விஸ்கொன்சின்' இல் ஒபாமாக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க அதிபர் தேர்தல் - சூடுபிடிக்கும் பிரச்சாரங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com