வருடாந்த ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
சவுதியிலுள்ள மெக்கா தலத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் உள்ளனர்.
மெக்காவிலுள்ள அரஃபாத் மலைக்கு மேலே சூரியன் உதிக்கும் போது யாத்திரிகர்களின் பெரும் கூட்டம் தமது பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
இந்த யாத்திரிகர்களில் சிரியாவைச் சேர்ந்த அட்னான் டெர்கவி கருத்துரைக்கையில் மத்தியகிழக்கில் முக்கியமாக சிரியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே இம்முறை ஹஜ் யாத்திர்கர்களின் பிரதான பிரார்த்தனையாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் தான் கடவுளிடம் தாழ்மையாக வேண்டிக் கொண்டது என்னவென்றால் அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதாகும். சிரியா பழைய நிலைக்குத் திரும்பி பாதுகாப்பான நாடாகும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
பொதுவாக முஸ்லிம்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அரேபியாவின் மெக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் எனும் உந்துதல் உடையவர்கள் ஆவார்கள். ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வுகள் புதன் கிழமை அன்று தொடங்கின.

0 Responses to மத்திய கிழக்கில் சமாதானம் நிலவ ஹஜ் யாத்திரிகர்கள் பிரார்த்தனை