Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் சென்னை அழகி பிதுஷி தாஸ் பர்தே நேற்று மும்பையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மிஸ் சென்னையாக தெரிவான பிதுஷா, 2010ம் ஆண்டு பர்டே என்பவரை காதல் திருமணம் செய்து மும்பையில் குடியேறினார்.

நேற்று காலை, வீடு திரும்பிய கணவர் கேதார், மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது அவர்கள் விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர். கத்தியால் குத்தப்பட்டு பிதுஷி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மனைவிக்கு யாரும் பகையாளிகள் இல்லை எனவும், எல்லோரிடமும் சகஜமாக பழகுபவள் எனவும் அவரது கணவர் கேதார் தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிறந்து வளர்ந்த புதுஷிதாஸ் பர்தே மாடலிங் துறையிலிருந்து மிஸ் சென்னை போட்டிகளில் பங்கேற்றார்.

0 Responses to முன்னாள் சென்னை அழகி, மும்பையில் படுகொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com