Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளர்களை அவமதித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் உத்தரபிரதேச அரச அதிகாரி ஒருவரை, முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார்.

உ.பி அமைச்சரும், காதி & கிராம் உத்யோக் வாரியத்தின் துணை தலைவருமான நட்வார் கோல் என்பவரே இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தொகுதி ஒன்றை புகைப்படம் எடுத்து திரும்பிக்கொண்டிருந்த இரு நபர்களை இடை மறித்து,

 நட்வார் கோல் மற்றும் அவரது இரு தனிப்பட்ட அதிகாரிகள், அலுவலகத்திற்கு அழைத்து சென்று, கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். விசாரணையில் இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என சமாஜ்வாத கட்சி தெரிவித்துள்ளது.  இதேவேளை இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் நிருபர் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த அமைச்சர், தன்னை குறித்த நிருபர் தான் அவதூறு செய்ய முயற்சித்ததாக ஆக்ரோஷப்பட்டார். மேலும் நிருபர்களுக்கு முன்னர் தனது சட்டையை கழற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சமாஜ்வாத கட்சித்தலைவர்கள் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதற்தடவை அல்ல என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.


0 Responses to ஊடகவியலாளரை அச்சுறுத்திய உ.பி தலைவர் அதிரடி பதவி நீக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com