Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் ஆப்பரேட்டர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் பாசிஹ் மொஹ்மட் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டிருப்பதுடன், டெல்லிக்கு வந்திறங்கிய வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மற்றும் பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டுத்தாக்குதல்களில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஃபாசி மொஹ்மட் கடந்த 5 மாதங்களாக சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் நாடுகடத்தப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டிருந்ததுடன், இண்டர்போலினாலும் சிவப்பு சமிக்ஞை விடப்பட்டிருந்தது. பொறியியலாளரான ஃபாஸி, பீஹாரில் பிறந்து வளர்ந்தவர்.

கடந்த 2010ம் ஆண்டில் பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் நடந்த குண்டு தாக்குதல் மற்றும், டெல்லியின் ஜாமா மாஸ்ஜித் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

0 Responses to சவுதியிலிருந்து நாடுகடத்தப்பட்ட தீவிரவாத சந்தேக நபர் டெல்லியில் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com