Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பாட்டுத்திறன் போட்டி 03.11.2012 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சார்சல் La maison de quartier
''Lesvignes blanches ''Avenue anna de noailles, 95200 sarcelles என்னும் நகரில் மாநகரசபை மண்டபத்தில் ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவுகளுக்குமான போட்டியாளர் மிகவும் உற்சாகமாகவும், திறமையாகவும் தமது பாடல்களை சமர்ப்பித்திருந்தனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் தாயகப்பாடலை மனப்பாடம் செய்தது அதனை மக்கள் முன் சமர்ப்பித்த விதமும் போட்டிகளும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன. போட்டியாளர் இசை ஆசிரியர்களால் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. பிரிவுகளுக்குள் ஈ பிரிவுக்குள் பாடிய போட்டியாளர்கள் அனைவருமே மிகவும் திறமையாகவும், உணர்வாகப் பாடி மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருந்தனர்.

இப்போட்டிகளின் நடுவர்களாக தாயகத்தில் கர்நாடக சங்கீத ஆசியரும், கலைப்பட்டதாரியுமான திரு.சேயோன் அவர்களுடன் தாயகத்திலிருந்து சிறிய வயதில் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்த போதும் தாய் மொழியையும், கலையையும் முறையாக கற்று பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தில் பங்கு கொண்டு சிறந்த பாடகிகளில் ஒருவராகவும் கலைப்பட்டதாரி பட்டத்தைப் பெற்ற இளைய சமுதாயத்தை சேர்ந்த செல்வி. நிலானி அவர்களும், சிறந்த பாடகரும், கலைநிகழ்வின் நெறியாளராகவும், நடிகரும் கலைஞருமாகிய திரு.கணேசமூர்;த்தி அவர்களும், நடுவர்களாக கடமையாற்றியிருந்தனர். போட்டிகளின் கண்காணிப்பாளராக மாவீரர் சூட்டி மாவீரர் கப்ரன் வரதப்பா ஆகிய இருவரின் சகோதரர் கடமையாற்றியிருந்தார். இவர்களுக்கான இசையினை தமிழர் கலைபண்பாட்டுக்கழக் கலைஞர்கள் வழங்கியிருந்தனர்.  போட்டிகள், மாணவர்களின் பங்குபற்றிய ஒரு பார்வையும் இடம் பெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் விபரங்கள்.
அ. பிரிவில்.
முதலாவது இடத்ததை :  சிறிரங்கன் கரிணி
இரண்டாவது இடத்தை :  சுரேஸ்குமார் சங்கீதன்

ஆ. பிரிவில்.

முதலாவது இடத்ததை : சிறீதரன் ஆரபி
இரண்டாவது இடத்தை : சுரேஸ்குமார் சாகித்தியன்
மூன்றாவது இடத்தை : விNஐந்திரா அக்சயன்

இ. பிரிவில்.

முதலாவது இடத்ததை  : அமிர்தராஐh ஆரணன்
இரண்டாவது இடத்தை : nஐரால்ட் றோய் nஐசிக்கா
மூன்றாவது இடத்தை : எட்வேட் லூயிஸ் இலக்கியா
( இருவர்)          : பக்திவேல் கரிசன்

ஈ பிரிவில் .

முதலாவது இடத்ததை : எட்வேட் லூயிஸ் அனோஐpனி
இரண்டாவது இடத்தை : கோகுலதாஸ் சூரியா
மூன்றாவது இடத்தை :  nஐயதாஸ் nஐருசா
 ( இருவர்)         : சோதிராசா சோனா

உ பிரிவில் .

முதலாவது இடத்ததை  : சிவலோகநாதன் நிசாங்கனி
இரண்டாவது இடத்தை : எட்வேட் லூயிஸ் வேர்ஐpனியா
மூன்றாவது இடத்தை :  கோகுலாதாஸ் வித்தியா

ஊ பிரிவில் .

முதலாவது இடத்ததை   : இராலிங்கம் றொசான்
இரண்டாவது இடத்தை : சிவலோகநாதன் திலக்சன்

ஏதிர் வரும் 10.11.2012 சனிக்கிழமை ஏனைய போட்டிகளான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, தனிநடிப்பு, இதே மண்டபத்தில் காலை 10.00 மணிமுதல் தொடர்ந்து நடைபெறவுள்ளன. அனைத்துப்போட்டிகளிலும் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் பேச்சுப்போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டவர்கள் மாவீரர்நாளிலும், ஏனை இடத்தைப்பெற்றுக் கொண்டவர்கள் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நாளில் தமது திறமையை வெளிக்காட்டவுள்ளார்கள்.


0 Responses to தமிழீழ தேசிய மாவீரர் நினைவு கலைத்திறன் போட்டிகள் – பிரான்சு 2012

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com