Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசியா நோக்கி சென்று கொண்டிருந்த மியன்மார் அகதிகள் கப்பலொன்று இன்று காலை வங்கதேச - மியன்மார் எல்லையில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படகில் பயணித்த 87 பொது மக்களைக் காணவில்லை என வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலேசியாவிற்கு சென்று சட்ட விரோதமாக வேலை செய்யும் நோக்கில் மியான்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் 110 பேர் இவ்வாறு படகில் சென்றிருந்தனர். இதில் பயணம் செய்த சுமார் 23 அகதிகளை வங்க தேச மீட்புப் படையினர் மீட்டுள்ளதாக வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வங்கதேச கப்பற் படையும் BGB அதிகாரிகாளும் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து காணாமற் போனவர்களை மீட்பதற்கான பணியை முடுக்கியுள்ளனர்.

இதேவேளை நடுக்கடலில் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படும், படகில் பயணித்த பயணிகளில் பலர், தலைநகர் டாக்காவில் இருந்து 292 மைல் தொலைவில் அமைந்துள்ள கோக்ஸ் பஷார் மாவட்டத்திற்கு நீந்திக் கரையேறியிருப்பதாகவும் இவர்களை இன்னமும் அடையாளம் காண முடியவில்லை எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வங்க தேசத்தின் தென் கிழக்கே அமைந்துள்ள இரு முகாம்களில் பதிவு செய்யப் பட்ட சுமார் 28 000 மியான்மார் அகதிகள் உள்ளனர். இதைவிட 300 000 இற்கும் 500 000 இடைப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் அங்கு சட்ட விரோதமாக அங்கு வசித்து வருகின்றனர். அண்மையில் மியன்மாரில் பௌத்தர்களுக்கும் குரித்த ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கும் இடையில் வெடித்த இனக்கலவரத்தில் பலநூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வங்கதேச தீவுக்கு அருகே கவிழ்ந்த படகில் 87 மியான்மார் அகதிகள் மாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com