Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளை வியாழக்கிழமை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 18 ஆவது மாநாட்டு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அதிகாரிகள் உட்கட்சிக்குள் இலஞ்சத்தை ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்க உள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் 'கை மிங்ஷாவோ' புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டில் சீனாவின் புதிய அதிபர் அறிவிக்கப் படவுள்ளார். இம்மாநாட்டில் 24 பொலீட் பீரோ உறுப்பினர்களும் 200 கட்சியின் மத்திய குழு நிர்வாகிகளும் உட்பட 2270 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இம்மாநாட்டில் கட்சியின் உள்ளே நிலவும் பிரச்சினைகள், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப் படவுள்ளன. இதன் பொருட்டு குறித்த மாநாடு நடக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டும் ஹெலிகாப்டர்கள் மூலமாக வான்வெளி பாதுகாப்பும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மேலும் நாளை நடைபெறவுள்ள இந்த முக்கிய மாநாட்டுக்கான ஒத்திகை இன்று பீஜிங்கில் பொது மக்களுக்கான பெரிய மண்டபத்தில் (Great hall of people) சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஹு ஜிந்தாவோ தலைமையில் இடம்பெற்றது.

0 Responses to சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது மாநாடு வியாழன் தொடக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com