அவுஸ்திரேலியா சிட்னியில் 27.11.2012அன்று Newington Reserve, Holker Street, Silverwater இல் கொட்டும் மழையிலும்; மாவீரர்நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மாலை6.00 மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பொதுச்சுடரை மேஐர் அசோகன், மேஐர் இனியவன் இரு மாவீரர்களின் சகோதரன் nஐசி அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரினை மேஐர் சலீம் அவர்களின் தாயார் அல்போன்சஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழதேசியக் கொடியினை சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஜனகன் சிவராமலிங்கம் அவர்களும், அவுஸ்திரேலியா கொடியினை அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் ஊடகப் பொறுப்பாளர் சாம்பவி பரிமளநாதன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

மலர் அஞ்சலியை இரு மாவீரர்களின் சகோதரனான லிங்கரூபன் அவர்கள்
ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைக்கு அவர்களுடைய
உறவினர்கள் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்த தொடர்ச்சியாக அனைத்து
மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அடுத்ததாக இளையோர் அமைப்பினரின் நாட்டிய நாடகம் இடம்பெற்றது.
சிறப்புப் பேச்சாளராக மலேசியாவில் இருந்து வருகைதந்த இரா.திருமாவளவன்
அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இறுதி நிகழ்வாக ஐம்பதிற்கும் மேற்பட்ட இளையோர் இணைந்து தமிழீழ புரட்சி ஆட்டம் TEPA எனும் உணர்வூட்டும் புதிய ஒரு நிகழ்வை நடாத்தினார்கள். அதனைத் தொடர்ந்து உறுதி உரையுடனும் கொடியிறக்கலுடனும் இன் நிகழ்வு நிறைவு பெற்றது.

0 Responses to அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)