கண்ணன் என்ற 26 வயது இளைஞர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டியார் நகரில் உயரமாக இருக்கும் ஒரு கட்டிடத்தில் மேலே உள்ள செல்போன் டவரின் உச்சியில் நின்றுகொண்டு நான் குதிக்க போகிறேன். என் பொண்டாட்டி வரலைனா குதிச்சுடுவேன்' என மிரட்ட நாலாபுறமும் மக்கள் குவிந்துவிட்டனர். அந்த இடத்திற்கு காவல்துறை ஏ .சி சந்த்ரசேகர் வந்தார்.
மைக் வைத்து 'எப்பா தம்பி இறங்கி வாப்பா' என்க 'அண்ணா நீங்க மேல வாங்கண்ணா' என்கிறார் கண்ணன்....டேய் என்னடா இது நம்மளை வர சொல்றான் பைர் சர்வீசை கூப்பிடுங்கப்பா என்றார் கொஞ்சம் வேர்த்தபடி .
அதன் பின் தீயணைப்பு படையினர் வரவும், 'என்னை யாரும் காப்பாற்ற முயற்சி செய்யகூடாது எனக்கு என் வினோ வேணும் என் வினோதினி வேணும் அவ இங்க வரும் வரைக்கும் நான் கீழ இறங்க மாட்டேன்' என்கிறார் கண்ணன். மதியம் ஒரு மணிக்கு தொடங்கி
மாலை நான்கு மணிவரை போலீசார் எவ்வளவு தூரம் பேசியும் கீழே வர அவர் மறுத்துவிட்டார்.
மாலை நான்கு மணிவரை போலீசார் எவ்வளவு தூரம் பேசியும் கீழே வர அவர் மறுத்துவிட்டார்.
கண்ணனின் வக்கீல்கள், உறவினர்கள் வந்து பேசி பார்த்தனர் மசியவில்லை. பத்திரிக்கையாளர்கள் 'கண்ணா பேட்டி எடுக்கணும் கீழ வாப்பா உன் கோரிக்கையை சொல்லு அப்போ தானே மனைவியோடு சேர்த்து வைக்க முடியும் என்றனர் 'ஆமான்னா நீங்க சொல்றது சரிதான்னா அதனால நீங்க ஏறி வாங்கண்ணா உங்களை நான் நம்புறேன் ஆனா பார்த்து பத்ரமா வாங்கண்ணா 'என சொல்ல 'இவரு நக்கலடிக்கிறாரா இல்ல தெரியாம தான் பேசுறாரா'னு குழம்பித்தான் போயினர் ஊடகத்துறையினர்.
திடீரென மேலே இருந்த கண்ணன் வினோ வினோ ஐ.லவ் யூ என கத்த எங்கே குதித்துவிடுவாரோ என பதறிய காவல்துறை மீண்டும் மைக் பிடித்து அவர் மனசை இளக்க செய்ய பேசியபடியே இருந்தனர்.
இறுதியாக பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஒரு போலீசாரை கூப்பிட்டு, சீருடைய மாற்றிவிட்டு வரசொன்னர். பக்கத்தில் இருந்த ஒரு பத்திரிக்கை புகைபடக்காரரின் பையை வாங்கி அதை போலிசாரின் தோளில் போட்டுவிட்டு “நீ மேலே ஏறி அவனை கூட்டிக் கொண்டுவா என்று மேலே ஏற்றி அனுப்பினார்.
மேலே செய்தியாளர் என்ற தோற்றத்தில், கோபுரத்தின் மீது ஏரிய போலீசாருடன் பேசிய அந்த இளைஞர், தன்னை ஏமாற்றி மனைவியை அவரது உறவினர்கள் பிரித்து கொண்டுபோய் விட்டதாகவும், அது குறித்து புகார் கொடுத்ததும் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதாக கூறிய அவர், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தான் இந்த கோபுரத்தில் ஏறியதாக கூறியுள்ளார்.
அப்படியானால், நீ இந்த செய்தியை கீழே இருக்கும் செய்தியாக்ளர்களிடம் சொல்லலாம் வா.... என அவர் கூப்பிட அத தான் உங்ககிட்ட சொல்லிட்டேனே இத போயி அங்க சொல்லிடுங்க என கூறிவிட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல மேலே ஏறிவிட்டு வினோ ஐ லவ் யூ என்றபடியே இருந்தார்.
அதன் பின் அங்கு வந்த வக்கீல்கள் பேட்டி கொடுப்பது போல ஒரு டிராமா செட் செய்தது காவல்துறை அதற்கிணங்க அவர்கள் 'இந்த உலகத்திற்கும் வினோதினி குடும்பத்திற்கும் ஒன்னு சொல்லிக்கிறோம் கண்ணன் காதல் புனிதமானது இன்று அவர் இந்த நிலை எடுக்க காரணம் காதல். அந்த காதலை புரிஞ்சுகிட்டு வினோதினி வரணும் அதே சமயம் நான் மற்றும் ஏ .சி சந்திரசேகர் இருவரும் சென்று அவர்கள் பெற்றோரிடம் பேசி கண்ணன் காதலியை மீட்டு வருவோம் என மைக் பிடித்து பேச அதன் பின் மசிந்த கண்ணன் தானாக கீழே இறங்கி வந்தார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்ப மினி நேரத்தில் ஹீரோவானார் கண்ணன்.
கீழே வந்தவர், 'நான் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவன் என்றும், தான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தது வந்ததாகவும், அந்த கல்லூரியில் பி.ஈ படித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிப்பட்டினத்தை சேர்ந்த வினோதினி என்ற மாணவியை காதலித்து திருமணம் செஞ்சேன். தாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த தீபாவளிக்கு ஒருவாரம் முன்னர் நங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம், இப்போது, நான் என்னுடைய மனைவியுடன் சேலம் அஸ்த்தம்பட்டியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வினோதினியின் உறவினர்கள் என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்து, காரில் கடத்திக்கொண்டு போய்விட்டனர்.
இதுகுறித்து, நான் அஸ்த்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தேன் அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தான் நான் இந்த முயற்சியை தொடங்கினேன் காதல் வாழ்க காதல் வாழ்க 'என்றார்.
ஏ .சி சந்த்ரசேகரோ 'கண்ணனை உயிரோடு மீட்கறதிர்க்குள்ள பெரும் பாடு பட்டுட்டோம் ஆனாலும் ஒரு உயிரை மீட்டோமேனு மகிழ்ச்சி தான்' என்றார்.
தற்கொலை முயற்சி, மற்றும் பொதுமக்களை மிரட்தியது மற்றும் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த காரணங்களுக்காக கண்ணனை கைது செய்து இப்போது, சேலம் நடுவன் சிறைக்கு பள்ளபட்டி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். காதல் எதையும் செய்யுமோ!!
0 Responses to காதல் படுத்தும் பாடு - செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி! (படங்கள், காணொளி இணைப்பு)