கர்நாடக முதல்வர் ஷெட்டரை தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
மேட்டூர் அணையில் உள்ள நீர் 6 நாள் பாசனத்துக்கே போதுமானது. தற்போது அணையில் உள்ள 16 டி.எம்.சி.யில் 5 டி.எம்.சி குடிநீர் தேவைக்கானது. அணையில் உள்ள மீன்கள் வாழ 5 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்க வேண்டும். எஞ்சிய 6 டி.எம்.சி நீரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும் என்றும் விளக்கினேன்.
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் தர மறுத்தது கர்நாடகம். ஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இது
குறித்து ஜெயலலிதா, ’’குறந்தது 15 நாட்களாவது 30 டி.எம்.சி. நீர் விட
கோரினேன். தண்ணீர் தராவிட்டால் சம்பா பயிர் கருகும் நிலையில் உள்ளது என்று
விளக்கினேன்.
மேட்டூர் அணையில் உள்ள நீர் 6 நாள் பாசனத்துக்கே போதுமானது. தற்போது அணையில் உள்ள 16 டி.எம்.சி.யில் 5 டி.எம்.சி குடிநீர் தேவைக்கானது. அணையில் உள்ள மீன்கள் வாழ 5 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்க வேண்டும். எஞ்சிய 6 டி.எம்.சி நீரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும் என்றும் விளக்கினேன்.
உச்சநீதிமன்றம்
கூறியதால் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கர்நாடகம்
மறுத்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளேன்’’என்று
கூறினார்.
இந்நிலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று ஷெட்டர் கூறியதாக செய்தி பரவியது.
இது
குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் ஷெட்டர். அவர்,
‘’கர்நாடக அணைகளில் 30 டி.எம்.சி. நீரே இருப்பு உள்ளது. பெங்களூர் மற்றும்
இதர நகரங்களின் குடிநீர் தேவைக்கு 20 டி.எம்.சி தேவை. எஞ்சியுள்ள 10
டி.எம்.சி. கர்நாடகத்தில் சாகுபடி செய்துள்ள பயிருக்கே போதாது.
கர்நாடகத்துக்கே
போதாது என்ற நிலையில் தமிழகத்துக்கு நீர் தர வாய்ப்பில்லை. தமிழகத்திற்கு
ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று கூறவில்லை. சென்னைக்கு வந்து நீர்
தேவை குறித்து பேசலாம் என்றே தெரிவிக்கப்பட்டது’’என்று விளக்கம்
அளித்தார்.
அவர் மேலும், ‘’கர்நாடகத்தின் யோசனையை ஜெயலலிதா ஏற்கவில்லை’’ என்றும் புகார் கூறினார்.
0 Responses to ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்லவில்லை: ஷெட்டர் மறுப்பு