Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2012ம் ஆண்டின் கனடாவின் சிறந்த உள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ரொறன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் 'நௌ' சஞ்சிகை, 'ரொரன்ரோவில் சிறந்தது' என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபேசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நௌ' சஞ்சிகை நேற்று வழங்கி மதிப்பளித்துள்ளது.

இந்த விருது பெறுவதையிட்டு தான் மிகுந்த பெருமை அடைவதாகத் தெரிவித்த ராதிகா, இவ் விருது வழங்கக்க காரணமாக இருந்தவர்களுக்கு ஆழ்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன் என ராதிகா தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் வி.கே.கிருஷ்ணமேனன் விருதும் ராதிகாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் பிறந்து வளர்ந்து ராதிகா சிற்சபேசன், தனது குடும்பத்தினருடன் 5வயதில் கனடாவில் குடியேறியவர். இலங்கையின் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வந்த அவர்,  கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி சார்பில்,  போட்டியிட்டு வெற்றி பெற்று, கனேடிய பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழராக சாதனை படைத்திருந்தார். பதவியேற்பின் போது நாடாளுமன்றத்தில் முதலில் தமிழில் உரையாற்றிய பின்னர் அவர் ஆங்கில மொழியில் உரையாற்றியிருந்தார்.

0 Responses to கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபேசன் தெரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com