தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று
விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
10 நாள் விஜயமாக செல்லும் இந்த சுற்றுப்பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. மாறாக தமிழரசு கட்சியின் ஊடக துறை பொறுப்பான உதவி செயலாளர் ந.வித்தியாதரன், வலுகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணபிள்ளை சேயோன் ஆகியோர் அடங்குகின்றனர்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள, பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தொடரில், இம்மூவரும் பங்குபெறுவார்கள் எனவும், சீன அரசின் அழைப்பின் பெயரிலேயே அவர்களது விஜயம் அமைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to கூட்டமைப்பின் விசேட பிரதிநிதிகள் குழு சீனா விஜயம்