ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள பாலஸ்தீனம் தனிநாடு எனும் அங்கீகாரத்தை நெருங்கியுள்ளது.
ஐ.நா சபையில் பார்வையாளர் தகுதி (OBserver Status) பெற்ற நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன. 41 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து இத்தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு பார்வையாளர் நாடு எனும் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐ.நா சபையினால் முழுமையாக ஒரு தனிநாடு எனும் அங்கீகாரத்தை பெறுவதற்கான முந்தைய நிலை இதுவாகும். இதுநாள் வரை ஐ.நாவின் அங்கத்துவம் இல்லாத நாடாகவே பாலஸ்தீனம் இருந்து வந்தது.
தற்போது கிடைத்துள்ள புதிய அங்கீகாரத்தின் மூலம், ஐ.நாவின் இதர அமைப்புக்களுடன் இணைந்து பாலஸ்தீனம் செயற்படலாம். ஐ.நாவின் விவாதங்களில் பங்கெடுக்கலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாக முறையீடக்கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்கு கிடைத்துள்ளது.
பாலஸ்தீனம் இவ்வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதற்கு அமெரிக்கா 'துரதிஷ்டவசமானது' என கருத்து தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்ற கடைசி வாய்ப்பாக இந்த அங்கீகாரத்தை தாம் பார்ப்பதாக பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். '65 வருடங்களுக்கு முன்னர், இதே ஐ.நா சபை, வரலாற்று பூர்வமான பாலஸ்தீன நிலப்பரப்பை இரண்டாக பிரித்து, இஸ்ரேல் எனும் தனிநாட்டு பிறப்பதற்கு வழிசெய்தது. ஆனால் இன்று பாலஸ்தீனர்களின் உண்மையான நிலப்பரப்பை ஐ.நா உணர்ந்துள்ளது' என தெரிவித்தார்.
இக்கருத்துக்களை கடுமையாக ஆட்சேபித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு, 'இந்த வாக்கெடுப்பு அர்த்தமற்றது. பாலஸ்தீன பிரதமர் அப்பாஸின் கருத்துக்கள் சமாதானத்தை விரும்புவரின் கருத்துக்களாக படவில்லை' என்றார். எனினும் வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றதை, அந்நாட்டு மக்கள் மேற்கு குடாவின் ராமல்லா நகரில் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

0 Responses to வாக்கெடுப்பில் வெற்றி : பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் புதிய அங்கீகாரம்!