Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

 
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல் திருமணம் ஒன்று ஊரையே பற்றி எரியவைத்திருக்கிறது.

குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன.  மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.  25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.

மேலும் பல வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.   ஊருக்குள் தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செல்லம்பட்டி ஊரைச்சேர்ந்தவர் திவ்யா. இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்.  நத்தம் காலணியைச் சேர்ந்தவர் இளவரசன்.   இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்தவர். 

இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றது.  பெண் வீட்டார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.  எனவே, திவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டார்.  இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ், இளவரசன் வீட்டுக்கு சென்று தன் மகளை அனுப்புமாறு கெஞ்சி கேட்டுள்ளார்.

திவ்யா இப்போது என் மனைவி அவளை அனுப்ப முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார் இளவரசன்.  தாழ்த்தப்பட்ட ஒருவரோரு தன் மகள் ஓடிவிட்டதால் ஊர் தன்னை கேலி செய்யும் என்று வேதனை அடைந்த நாகராஜ்,  இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லம்பட்டி வன்னியர் சமூகம்,   தாழ்த்தப்பட்ட இனம் வாழும் நத்தம் காலணியை அடித்து நொறுக்கி, கொளூத்தியிருக்கிறது.
இப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுவதால் தற்போது கிருஷ்ணகிரி எஸ்.பி.அசோக்குமார் தலமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 Responses to ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம்: தர்மபுரியில் பெரும் பதட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com