Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனியில் தமிழ் மக்கள் வாழும் நகரங்களில் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 130 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி அங்கே 6000 க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கட்கு அவர்களின்  தாய்மொழியையும் தமிழ்ப் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி கடந்த 03.11.2012 சனிக்கிழமை பண்டைக்கால வணிபத்துறைமுக நகரமான Köln (நறுமணநீர்) நகரில்  தனது 135 வது தமிழாலயத்தை ஆரம்பித்துள்ளது.

நிகழ்வை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகன் அவர்களும் நிர்வாகி திருமதி கலாசிறி தங்கரட்ணராசா அவர்களும் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தனர். ஆரம்ப நிகழ்வில் 20 க்கு மேற்பட்ட புதிய மாணவர்கள் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கான பாடநூல்கள் அங்கு வழங்கப்பட்டதுடன் வரும் காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் தமிழ் கற்பிப்பதற்கு மூன்று ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


0 Responses to யேர்மனியின் Köln நகரத்தில் புதிய தமிழாலயம் ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com