Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியை, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மத்திய அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றை எதிர்கொள்வதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் இந்த பேரணிக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த பேரணியில் ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்கு முன்னோட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, . எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. அவர்கள் விவாதத்திற்கு வர தயங்குகின்றனர்.

எதிர்க்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை தோற்கடிக்க முயற்சி செய்கின்றனர்.

ஊழல் குறித்து பேசுபவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர். பணவீக்கம் சாதாரண மக்களை பாதித்துள்ளது.

இதற்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே காரணம். நாம் 80 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்கிறோம்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை சமமாக நிறைவேற்றும் அரசு ஏதும் உள்ளதா என எதிர்க்கட்சிகளை கேட்கிறேன் என கூறினார்.

0 Responses to ஜனநாயகத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் முயற்சி: சோனியா காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com