பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர்
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனினதும் மற்றும் அவருடன்
வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு
தமிழ்ச்சங்கத்தினராலும், லாக்கூர்னோவ் கலைக்கூடம் என்ற பிரெஞ்சு
அமைப்பினராலும்
01.11.2012 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை லாக்கூர்னோவ் தமிச்சங்கத்தலைவர் திருமதி அ. யாழினி அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 2008 ல் கிளிநொச்சி பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர் லெப். வர்னப்பிரியாவின் தந்தையார் ஏற்றி வைத்திருந்தார். சு.ப.தமிழ்ச்செல்வனின் உருவச்சிலைக்கு அவருடைய சிறியதாயார் மலர்மாலை அணிவிக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர்களின் நினைவாக லாக்கூர்னோவ், பொபினி தமிழ்ச்சங்க மாணவியர்களும், ஆதிபராசக்தி பாடசாலை மாணிவிகளும் மாவீரர்நினைவு நடனம் வழங்கியிருந்தனர். தமிழ்சங்கத் தலைவர் அவர்கள் பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் தமிழ்ச்செல்வன் பற்றியும் அவர் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய செயற்பாடுகள் பற்றியும் கூறியிருந்தார். இதில் சிறப்பாக கலந்து கொண்ட லாக்கூர்னோவ் மாநகர முதல்வர் அவர்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்றும், ஒரு இனத்தை அழிப்பதற்காக திட்டமிட்டு ஒரு போரைத் தொடங்கியதும், அதற்கு உலகநாடுகள் துணைபோனதும் மிகவும் வேதனை தரக்கூடியது என்றும், ஏனைய சில நாடுகளின் விடுதலைபோராட்டம் அழிக்கப்பட்டது போன்று தமிழ்மக்களின் நியாயமான போராட்டம் அழிக்கப்பட்டது என்றும் தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை அடைவதற்கு இன்னும் பல நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் இடைவிடாது பயணிக்க வேண்டும் என்றும், தமிழர்களின் நியாயமான போராட்டம் கிடைக்கும் வரை தானும் தனது கட்சியும் தொடர்ந்து உதவி வரும் என்றும் தனது கட்சித்தலைவி இங்கு பல தடவைகள் தமிழ்மக்களின் முன்னெடுப்புகளுக்கு உதவி வந்து கொண்டிருப்பதையும் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்பக்குழு உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் தாயக விடுதலைப்போராட்டத்தில் தமிழ்ச்செல்வன் அவர்களின் பங்கு பற்றியும், பேச்சு வாத்தை மேடையாக இருந்தால் என்ன களப்போராட்டமாக இருந்தால் என்ன தலைவனின் விருப்பை செயற்படுத்துகின்ற ஒரு தன்னிகரற்ற போராளியாக வீரச்சாவடையும் வரை இருந்தவர் என்றும், அவருக்கு பிரான்சு அரசும், பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் சிலை வைத்து சுதந்திரமாக வணக்கம் செலுத்தி வரும் இந்நிகழ்வுகள் எமது விடுதலைப்போராட்டத்தை இந்த நாடும், அரசும் எற்றுக்கொண்டுள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. ஏன்றும் தொடர்ந்து எமது மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதி பூணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தரக மந்திரத்துடன் நிறைவு பெற்ற போது சரியாக வானம் கறுத்து ஐந்து நிமிடங்கள் பனி கொட்டி மழைபெய்தமை ஒரு இயற்கை அன்னையின் வாழ்துக்கள் போல் இருந்ததாக மக்கள் கூறிக்கொண்டனர்.

0 Responses to பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழச்செல்வனின் 5 வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு