Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜேர்மனி டோட்மூண்ட் மாநகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மாவீரர் எழுச்சி நிகழ்வு இடம் பெற்றது. காலை 10:30 மணியளவில் மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பு மிக சிறப்பாக இடம் பெற்று.

தொடர்ந்து 12:00 மணியளவில் தேசியக்கொடியேற்றலோடு ஆரம்பமான எழுச்சி நிகழ்வுகள் அகவணக்கம் மலர் அஞ்சலிகளை தொடர்ந்து தமிழீம் இசைக்குழுவினரின் சிறப்பான எழுச்சி கானங்கள் தொடர்ந்து தமிழாலய மாணவ மாணவிகளின் கவிவணக்கம் இடம் பெற்றது.

சிறப்புரையைத் தொடர்ந்து, சிறப்பு அதீதியால் மாவீரர் வெற்றிக்கிண்ண மதிப்பளிப்பு இடம்பெற்றது, இறுவெட்டு வெளியீடு, நூல்வெளியீடு இவற்றை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்ற  நாட்டிய நாடகம் மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரையும் விழிப்பூட்டும் வகையாக அமைந்தது. மாலை 7மணி மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு தாரகமந்திரத்துடன் மாவீரர் எழுச்சி நிகழ்வு நிறைவு பெற்றது.


0 Responses to ஜேர்மனி டோட்மூண்ட் மாநகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மாவீரர் எழுச்சி நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com