நியூசிலாந்து, ஓக்லாந்து நகரில் இன்று மாலை 6 . 30
மணியளவில் Mt Roskill Intermediate School மண்டபத்தில் பொதுச்சுடர்
ஏற்றலுடன் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
முதலில் பொதுச்சுடரினை மாவீரர் இளந்தீரனின்
சகோதரர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டின் கொடியினை
மாவீரரின் தகப்பனார் மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழீழ தேசியக் கொடியினை மாவீரர் வியைஜின் தந்தையும், ஈகைசுடரினை மாவீரர் தங்கச்சியனின் சகோதரர் ஏற்றிவைத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தீபங்களை கையில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் உருவாக்கப்பட்ட தேசியத்தலைவர் அவர்களின் கடந்தகால மாவீரர் உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது.
மாவீரர்நாள் 2012ம் ஆண்டிற்கான சிறப்பு உரையினை ஸ்ரீதேவா ஸ்ரீதரன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,
இன்றைய போராட்டமானது இளையோர்களின் கைகளில்தான் தங்கி உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து மக்களினதும் செயற்பாடுகள் அவசியம். என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவீரர்களை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் பாடல்களும் இடம்பெற்றன.

0 Responses to நியூசிலாந்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)