பிரித்தானிய
தமிழ் இளையோர்களால் வழமைபோல இம்முறையும் 'இளையோர் மவீரர்நாளும்' இலங்கை
அரசாங்கத்தின் இனப்படுகொலைகளை வெளிக்கொண்டுவரும் விதமான
விழிப்புணர்ச்சிகளும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றன. கடந்த இரண்டு
வருடங்களா லண்டனுக்குள்ளே இடம்பெற்ற இவ் நிகழ்வுகள் இம்முறை லண்டனுக்கு
வெளியேயுள்ள பல பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்து இடம்பெற்றன.
லண்டனின் பல பாகங்களில் இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கான இனப்படுகொலைகள் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதேபோல சர்வதேசம் தமது மௌனத்தை கலைக்கவேண்டும் என்ற விழிப்புணர்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டது. இதன் இறுதி நாளில் இளையோர்களால் லணடன் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் (Kings University) மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களின் பாடல்கள் பேச்சுக்கள் கவிதைகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சு தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றன. அதேபோல பிரத்தானிய Liberal Democrat MP for Bermondsey and Old Southwark Simon Hughes சிறப்புரை ஆற்றினார்.
அதேபோல லண்டனுக்கு வெளியேயுள்ள பல பல்கலைக்கழகங்களை இணைத்து லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் (university of leicester) இளையோர்களால் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது, மாணவர்களால் பேச்சு கவிதைகள் மற்றும் யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட விவரணப்படமும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. அதன் பிற்பாடு லெஸ்டர் பல்கலைக்கழக மாணவியின் பேச்சு மாணவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாட்டை காட்டியது, அவ் மாணவி தெரிவிக்கையில் "லண்டன், பாரிஸ், ஜேர்மன், கனடா எமது நாடுகள் அல்ல எமது நாடு எங்கோ ஒரு இடத்தில இருக்கிறது அதன் பெயர் தமிழீழம் அதனை நாம் அடைய வேண்டும்" இவ்வாறு தெரிவித்த அந்த மாணவியின் பேச்சு சக மாணவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு எழுச்சி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவேறியது.
0 Responses to லண்டனுக்குள்ளேயும் வெளியேயும் பல்கலைக்கழகங்களில் இளையோர்களால் மாவீரர் நாள் மிக சிறப்பாக அனுஸ்டிப்பு