Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 20 மாதங்களாக நிகழ்ந்து வரும்  யுத்தம் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக சிரியாவின் வடக்கே அதன் தலைநகரமான டமஸ்கசுக்கும், இன்னொரு முக்கிய நகரமான அலெப்போவுக்கும் இடையே அமைந்துள்ள பிரதான விமான தளமான டாப்டனாஸை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சிப் படையினர் முயன்று வருகின்றனர்.

இராணுவத்துக்குச் சொந்தமான இந்த விமான தளத்தைக் கைப்பற்றுவதற்கு சனிக்கிழமை மாலை முதல் கடும் சண்டை நிகழ்ந்து வருவதாக பிரிட்டனில் அமைந்துள்ள சிரிய கண்காணிப்பு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரிய அரசுக்குச் சொந்தமான வானொலி நிலையம் ஒன்று செய்தி வெளியிடுகையில் அரச படையினர் இந்த தாக்குதலை முறியடித்திருப்பதாகவும் கணிசமான அளவு ஆயுததாரிகளைக் கொன்றிருப்பதாகவும் அவர்கள் விமானத் தளத்துக்கு வருவதற்கு உபயோகித்த வாகனங்களையும் தகர்த்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இதுவரை சுமார் 20 000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த சிரிய யுத்தம் ஐ.நா ஆல் பிரேரிக்கப் பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கும் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிரிய, இஸ்ரேல் எல்லைக்கு அண்மையில் இராணுவம் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ள பகுதிகளான கோலன் மற்றும் ஹைட்ஸ் ஆகியவற்றுக்கு சிரிய அரசு மூன்று டாங்கிகளை அனுப்பி உள்ளது.

இச் செய்கையினால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல் இவ் விடயம் தொடர்பாக ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளமை அப் பகுதிகளில் தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.

0 Responses to சிரியாவின் முக்கிய விமான தளத்தை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சிப் படை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com