தேசவிரோத சக்திகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி
அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்று டோர்ட்முன்ட் நகரில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -யேர்மனிக் கிளையின் டோர்ட்முன்ட் நகரக்
கோட்டப் பொறுப்பாளர் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க, பொது ஈகைச் சுடரை,
பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து
கூடியிருந்த உறவுகள் அனைவரும் , மலர் வணக்கத்துடன் கூடிய சுடர் வணக்கத்தை
நிகழ்த்தினர்.
நிகழ்வில் உரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் அவர்கள் கூறுகையில்; எமது பலவீனங்களைப் பயன்படுத்தி எதிரியானவன் எம்முள் நுழைந்து எம்மை அழிக்க முற்படுகிறான், அவனது செயற்திட்டத்திற்கு நமது உறவுகள் பலியாகக் கூடாது. நாம் எப்பொழுது ஒற்றுமையாக எமது விடுதலை இலக்கை நோக்கி நகருகிறோமோ, அன்றுதான் எமது எதிரிகளை இனங்கண்டு கொள்ள முடியும். கேணல் பரிதி அவர்கள் எமது விடுதலைக்காக களத்திலும் புலத்திலும் போராடியவர். அவர்வழி நின்று அனைத்து மக்களும் போராட முன்வர வேண்டும் என்றார்
கேணல் பரிதி அவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த தாகவும் , எப்பொழுதும் எமது விடுதலையின் அவசியத்தைக் கூறி, நாம் சாவடையும் நாள்வரை விடுதலைக்காகவே உழைக்கவேண்டும் என்றும் அடிக்கடி கூறுவார் என பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தனது உரையில் விழித்துரைத்தார்.
தொடர்ந்து, யேர்மனியத் தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் உரையாற்றிய சுவீட்சன் அவர்கள்; எமது தளபதி பரிதி அவர்களின் மீதான படுபாதகக் கொலைச் செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அதற்கான சர்வதேச நீதியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த கிருஷாந்தி அவர்கள்; கேணல் பரிதி அவர்களுடனான நினைவுகளையும் , அவரது செயற்பாடுகளைத் தொடர்ந்து நாம் முன்னெடுத்து உழைக்க வேண்டுமென்றும் கூறி தனது உரையை நிறைவுசெய்தார். மாலை 17.30 மணியளவில் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது .

![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_01.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_02.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_03.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_04.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_05.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_06.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_07.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_08.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/11/parithi_hero_09.jpg)
0 Responses to யேர்மனி - டோர்ட்முன்ட் நகரில் கேணல் பரிதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)