பக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வெடித்ததில் இந்தியர் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பக்ரைனில் மன்னராட்சிக்கு எதிராக ஷியா பிரிவை சேர்ந்த அரசியல்வாதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் இப்போராட்டத்திற்கு தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைக்கண்டித்து அங்கே பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று தலைநகர் மனாமாவில் ஐந்து இடங்களில் குண்டு வெடித்ததாகவும் இதில் இந்திய தமிழர் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு இந்தியரும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிகிறது. இதனை பக்ரைன் நாட்டுக்கான, இந்திய தூதர் மோகன்குமார் உறுதி படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை பக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

0 Responses to பக்ரைனில் குண்டு வெடிப்பு: இந்தியர் பலி