கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய மண்ணில் பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியினர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட இந்திய
உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்து உள்ளது.
இதை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே.
மேலும் பால்தாக்கரே இதுபற்றிக் கூறுகையில், "2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அதற்குள் மறந்து விட்டதா? ஷிண்டே எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்? இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணியினர் விளையாடப் போவதை நினைத்தால் எனக்கு ரத்தம் கொதிக்கிறது.
இந்திய மண்ணில் எந்த மூலையில் பாகிஸ்தான் கிரிகெட் அணியினர், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், சிவசேனா தொண்டர்கள் அங்கெல்லாம் போட்டி நடக்கவிடாமல் போராட்டம் நடத்துவார்கள்" என்று உடல் நிலை சரியில்லாத போதும் கூட அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் பால்தாக்கரே.
எனினும் திட்டமிட்டபடி டிசம்பரில் இந்திய அணியுடனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விளையாட்டு போட்டிகள் சுமுகமாக நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

0 Responses to இந்திய மண்ணில் பாகிஸ்தான் கிரிகெட் வீரர்கள் விளையாடுவதை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது: பால்தாக்கரே