Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலியூரில் மாவீரர் தின அஞ்சலி

பதிந்தவர்: தம்பியன் 28 November 2012


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின் பயிற்சியாளர்களைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டன.

அவ்வாறு கொளத்தூரை அடுத்த கும்பாரப்பட்டியில் அமைக்கப்பட்ட பயிற்சி முகாமில் மூன்று பிரிவுகளில் (பேட்ஜ்) சுமார் 900 போராளிகள் பயிற்சி பெற்று இலங்கை சென்று போரில் ஈடுபட்டனர்.


பயிற்சிக்காக வந்திருந்த போராளி இளைஞர்கள் உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தனர். இதையடுத்து கும்பாரப்பட்டியின் மக்கள் புலிகளின் நினைவாக தங்களது ஊரின் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டனர்.

மேலும் இங்கு போராளிகளுக்கு பயிற்சி அளித்த பொன்னம்மான் என்ற தளபதியின் நினைவாக புலியூரில் நினைவு நிழற்குடை ஒன்றை அமைத்துள்ள பொதுமக்கள், ஆண்டுதோறும் ஈழத்தில் உயிரிழந்த போராளிகளுக்காக நவம்பர் 27-ம் தேதி கடைப்பிடிக்கும் மாவீரர் தினத்தன்று, பொன்னம்மான் நினைவு நிழற்குடை அருகில் திரண்டு போராளிகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

0 Responses to புலியூரில் மாவீரர் தின அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com