Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். முகாமில் உள்ள அனைவரும் திரண்டு முகாம் திடலில் மாவீரர்கள் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

 1996 மார்ச் 31 ந் தேதி யாழ்பாணம் சுபமலையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த பெண் போராளி 2ம் லெப்டினன் இளங்குயில் ஜெயசுதா என்கிற ஆ.உமாதேவியின் தாயார் பாப்பா ஆனந்தராசா மாவீரர்கள் தியாக சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
 

0 Responses to தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com