Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல்களை வெளியிட்ட குற்றத்தின் கீழ் 'Costas Vaxavanis' எனும் கிரீஸ் நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் மீது சுவிஸ் அரசு வழக்குத் தொடுத்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த கீரிக்கில்  உள்ள சுமார் 2000 பணக்காரர்களின் பெயர் விபரங்களைப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டமையே இவர் செய்த குற்றம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இவர் கைது செய்யப் படுவதில் இருந்து காப்பாற்ற கிரீக் வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு அதிகாரிகள் தமது கிரீக் சகபாடிகளிடம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது. எனினும் அவை பரிசோதிக்கப் படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்பெயர் விபரங்களை வெளியிட்ட Vaxavanis, கிரீக் அரசியல்வாதிகள் இப் பெயர் விபரங்களை இரகசியமாக வைத்திருந்தால் தண்டிக்கப் பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சுவிஸ் வங்கியின் இரகசியக் கணக்கு வைத்திருப்போரின் பெயர் விபரங்கள் கிரீஸின் வாராந்த நாளிதழான 'ஹொட் டொக்' இல் வெளியாகியுள்ளது. மறுபக்கத்தில், கிரீக் அரச அதிகாரிகள் சமீபத்தில் கசிந்த சுவிஸ் வங்கிக் கணக்கானர்களின் விபரங்களில் உள்ள நபர்கள் கிரீக் சட்டத்தை மீறியவர்கள் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ் விபரங்களை கசிய விட்ட பத்திரிகையாளரான 46 வயதாகும் Vaxevanis, மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் Vaxevanis மீது தண்டனை விதிக்கப் படாமல் இருக்க வாதாடி வரும் வழக்கறிஞர், Vaxevanis கசியவிட்ட பெயர் பட்டியலில் உள்ள ஒரு நபர் கூட அவர் மீது குற்றஞ் சுமத்தவில்லை எனவும் இந்நிலையில் சுவிஸ் வங்கி சுயேச்சையாக இயங்கி அவருக்குத் தண்டனை விதிக்க முடியாது என் வாதிட்டுள்ளார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிகித் தவித்து வரும் கிரீக்கில் இவ்வாறு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியது அங்கு மக்களிடையே மேலும் சீற்றத்தை விதைக்க வல்லது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

0 Responses to தனது நாட்டின் சுவிஸ் வங்கி இரகசிய கணக்குகளை கசிய விட்ட கிரேக்க பத்திரிகையாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com