Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை துறைமுகத்திலிருந்து நங்கூரம் அறுந்து, கடலில் மிதந்து பெசன்ட் நகர் பீச் அருகே தரைதட்டிய கப்பலை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்கென மும்பையிலிருந்து துறை வல்லுனர்கள் வரவழைக்கப் பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான நீலம் புயல் காரணமாக, சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த பிரதீபா காவிரி என்கிற எண்ணெய் கப்பல். நங்கூரம் அறுந்து, கடலில் மிதந்து தரைதட்டி நின்றது. புயலின் போது கடலில் கப்பல் மிதந்து சென்றதில் கப்பலில் இருந்த 37 கப்பல் ஊழியர்களை, கப்பலின் கேப்டன் லைப் லைன் போட்டில் தப்பிக்க கூறினார். அப்போது 15 பேர் கடலில் தத்தளித்த போது,அங்கிருந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றினர். மீதம் இருந்தவர்கள் தாங்களாகவே நீந்தி கரை ஏறினர்.

இதில் 5 பேர் கடல் நீரில் மூழ்கி இறந்து போயினர். பிணமாக இவர்கள் ஒவ்வொருவரையும் கப்பல் படையினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில் தரை தட்டி நிற்கும் கப்பலை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடலில் மூழ்கி இறந்த கப்பல் ஊழியர்களின் உறவினர்கள் இழப்பீடு தராமல் கப்பலை அப்புறப் படுத்த விடமாட்டோம் என்று கூறிவருவதாகவும் தெரிகிறது.

மேலும், மூன்று மாத காலம் கப்பலில் பயணிக்கும் கப்பல் ஊழியர்களுக்கு தகுந்த உணவு வசதி இல்லாததாலும் ஊழியர்கள் பசி, பட்டினி என்று கிடந்ததாலுமே கடலில் அவர்களால் நீந்தி தப்பிக்க முடியவில்லை என்றும் கப்பல் நிர்வாகத்தினர் மீது குறை கூறியுள்ளனர். மேலும் ஊழியர்களுக்கு 9 மாதம் சம்பளப் பாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளனர். எனவே கப்பல் நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும் அதோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ள இறந்தவர்களின் உறவினர்கள், இதை செய்யாவிட்டால் கப்பலை இந்த இடத்தில் இருந்து விடமாட்டோம் என்றும் கூறிவருவதாகத் தெரிகிறது.

0 Responses to சென்னையில் தரை தட்டிய பிரதீபா காவிரி கப்பலை மீட்க முயற்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com