'எனக்கு அடிபாதத்தில் (இரண்டு பாதங்களிலும் ) கடுமையான வலி உள்ளது.
இதற்கு நான் பல்வேறு மருத்துவர்களைப் பார்த்து வைத்தியம் செய்தும் எனக்குக் குணமாகவில்லை. மருத்துவர்கள் எனக்கு Gabapin 300, Tramodal, போன்ற மாத்திரைகளை அறிமுகப்படுத்தியதால், அதனை மூன்று வேளையும் உண்டு வருகிறேன்.
ஆனாலும் வலி தற்காலிகத்தான் நிவாரணம் கிடைக்கிறது. சில மணி நேரத்தில் மீண்டும் வலிக்க ஆரம்பித்து விடும். இதனால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இனிப்பு நீர் உள்ளது. அதற்கும் மருந்து உண்டு வருகிறேன். கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் இதன் காரணமாகவே எனக்கு நரம்பு வலி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். “நிரோபதி” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த வலி தீர எனக்கு மருத்துவர்களின் உதவி தேவை. இதற்காகத் தமிழ் மீடியாவின் உதவியை நாடியுள்ளேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.' என 4தமிழ்மீடியாவின் வாசகி புலவர் கோமகள் மலேசியாவிலிருந்து எழுதி அனுப்பியிருந்த கேள்வியை, மதுரை அப்போலா மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர், டாக்டர். ராஜாவிடம் முன்வைத்தோம்.
இதோ அவரது ஆலோசனை :
தங்களது கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், அது நீங்கள் ஆலோசனை செய்து வரும் டாக்டர் கூறியிருப்பது போல் நிரோபதி தங்களை துன்புறத்தி வருகிறது என்பது தான். தற்போது இதனை குணப்படுத்த இந்தியா போன்ற நாடுகளில் இரண்டு விதமான மருத்துவ ஆலோசனைகளை இனிப்பு நீர் எனப்படும் சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறோம்.
அதாவது, இந்தியாவில் பைசர் என்ற நிறுவனத்தின் லைரிக்கா 75 மில்லிகிராம் (Lyrica 75 mg) என்ற மாத்திரையையும், பாதங்களில் எரிச்சல் நீங்க கெட்ரிபிளின் என்ற ஆயுன்மெண்ட்டையும் (Ketriplin Ointment) பயன்படுத்த கூறுகிறோம். இதில் லைரிக்கா மாத்திரையை உட்கொள்ளும் போது சற்று சோர்வும், தூக்கம் வருவது போன்ற உணர்வும் இருக்கும்.
இந்த மாத்திரையை தினமும் 1 வேளை மட்டுமே உட்கொள்வது நல்லது. இதை உட்கொள்ளும் போது சோர்வும், தூக்கம் வருவது போன்ற உணர்வு இல்லாதவர்கள் இதனை காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது போன்ற பாதஎரிச்சல் இருக்கும் இனிப்பு நீர் நோயாளர்கள், எச்பிஏ1சி என்ற சோதனையை அவ்வப்போது மேற்கொண்டு உடலில் சர்க்கரை நோயின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சோதனையில் சர்க்கரை கட்டுப்பாட்டின் அளவு 7 சதவீதத்திற்கும் உள்ளாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த அளவிற்கு மேல் அதிகரிக்க கூடாது.
நீங்கள் சோயாபீன்ஸ், முட்டைக் கரு போன்ற புரோட்டின் சத்து நிறைந்த மற்றும் பச்சை காய்கறிகளை மட்டும் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜங்க் புட் என்ற வறுத்த, பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். அன்றாடம் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.
ஆலோசனை வழங்கியவர் : டாக்டர். ராஜா (94430 41062), சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர், அப்போலா மருத்துவமனை, மதுரை.
உங்களிடமும், உங்களது உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றனவா? கேள்விகளாக editor.4tamilmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தீர்கள் எனில் மருத்துவர்களின் நேரடி பதில்களை தரவிழைகிறோம்.

0 Responses to அடிப் பாதத்தில் உங்களுக்கு கடுமையான வலி ஏற்படுகிறதா?: மருத்துவ ஆலோசனை