சுவாமி நித்தியானந்தா, தனது நிலத்தை ஏமாற்றி அபகரித்து விட்டதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புகார் கூறியிருக்கிறார்.
விவசாயி குணசேகரன் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2005ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்தியானந்தாவிடம் அறிமுகமானேன்.
அவரது செயலாளர் சதானந்தா உள்ளிட்ட பலர் என்னிடம் சீரகாப்பாடி பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், கடத்தூர் முக்கோணம் பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்கும்படியும் கேட்டனர். நித்யானந்தாவும் இதுபற்றி என்னிடம் டெலிபோனில் பேசினார்.
எனவே 50 சென்ட் நிலத்தை தானமாக கொடுக்க ஒப்புக் கொண்டேன்.
கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்ற என்னிடமும் எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால் நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.
2010ம் அண்டு ஒக்ரோபர் 12ம் திகதி நித்தியானந்தாவுக்கு கொடுத்த நிலத்தின் அருகில் இருந்த எனது நிலத்தை விற்க முயன்றபோது நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் என்னைத் தடுத்து நிலம் முழுவதும் தங்களுடையது எனக் கூறி பத்திரத்தை காட்டினர்.
அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டியதால் பொலிஸில் புகார் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒக்ரோபர் 23ம் திகதி என்னை தொடர்பு கொண்ட சிலர், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் நிலத்தையோ, அதற்கான பணத்தையோ கொடுத்து விடுவதாகவும், இதை நித்தியானந்தா தன்னிடம் சொல்லச் சொன்னதாகவும் கூறினர்.
ஆனால் அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. எனவே எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

0 Responses to நிலத்தை அபகரித்ததாக நித்தியானந்தா மீது விவசாயி புகார்