ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் முதலாம் திகதி, மீளாய்வு அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விவாதம் நடந்தது. சுமார் 99 நாடுகள் கலந்து கொண்டு இலங்கை தொடர்பில் தமது பரிந்துரைகள், நிலைப்பாடு என்பவற்றை முன்வைத்தன.
இவற்றை ஆராய்ந்து இலங்கை தொடர்பில் வரைவு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஐ.நாவினால், இந்தியா, ஸ்பெயின், மற்றின் பெனின் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் நேற்று இந்நாடுகள் இலங்கை தொடர்பில் தமது வரைவு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தன. இவற்றிலேயே 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிராகரிப்பிற்கான காரணங்களை வரைபு அறிக்கையில் பிற்சேர்க்கையாகவும் இலங்கை அரசு சேர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகள் தமது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கு இலங்கைக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை தெரிவித்திருந்த இந்தியா இம்முறை மௌனம் காத்திருந்ததோடு, ஒரு பரிந்துரையையும் முன்நிறுத்தவில்லை என தெரிகிறது. குறிப்பாக 13வது சட்டத்திருத்தம் தொடர்பில் வரைவு பரிந்துரை அறிக்கையில் எவ்வித தகவல்களும் முன்னிறுத்தப்படவில்லை.
இதேவேளை இந்த அறிக்கையின் ஏனைய பரிந்துரைகள் தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கை அரசு தன்னார்வ அடிப்படையில் சில உறுதிமொழிகளை வழங்கவுள்ளதாக மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் இன்றைய நிலைப்பாடானது அனைத்துலக சமூகத்தினை ஏமாற்றும் சிங்கள சேதத்தின் இன்னுமொரு நடவடிக்கை என நாடு கடந்த தமிழீழ அரசின் அவை தலைவர் பொன் பாலராஜன் தெரிவித்துள்ளார்.

0 Responses to UPR : உலக நாடுகளின் 210 பரிந்துரைகளில் 100 ஐ நிராகரித்தது இலங்கை அரசு?