ஐ.நாவின், பூகோள காலக்கிரம மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கை ஆய்வு அறிக்கையின் இறுதிப்படிவம் இன்று பேரவைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் உள்ளிட்ட 46 தேசிய மற்றும் சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய அறிக்கைகள், புலம்பெயர் தமிழர்களின் 11 அமைப்புக்கள் மற்றும் தமிழீழ அரசாங்கம் ஆகியவற்றின் அறிக்கைகள் இக்கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவற்றை ஆராய்ந்து இறுதி விசாரணையை அறிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம், இந்தியா, ஸ்பெயின், பேனின் ஆகிய மூன்று நாடுகளுக்கு வழங்கியிருந்தது. எனினும் கடந்த மார்ச் மாத ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு குறித்த மூன்று நாடுகளுமே ஆதரவு வழங்கியிருந்ததால், தற்போது இந்நாடுகள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த மூன்று நாடுகளின் இலங்கை தொடர்பான அறிக்கை எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
கடந்த நவ.1ம் திகதி இலங்கை உரையாற்றியிருந்த போது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் குறித்தே அதிகளவு சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது கேள்விகளை எழுப்பியிருந்தன.
அன்றைய கூட்டத்தில், 99 நாடுகள் இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருதன. அதன் போது, யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை, அதியுயர் பாதுகாப்பு வலையங்களை நீக்காமை, 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து மேற்குலக நாடுகளின் கேள்விகள் அமைந்திருந்தன.
இதேவேளை, இன்றைய இறுதி அறிக்கை தொடர்பிலும், இலங்கை விவகாரம் தொடர்பிலும் இந்தியா ஐ.நாவில் முக்கிய பங்காற்ற வேண்டும் என ராஜ்யசபா எம்.பி கனிமொழி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளார்.
சர்வதேசத்தின் பலத்தை கண்டு இலங்கை தற்போது தான் பயப்பட ஆரம்பித்துள்ளது என இலங்கைக்கான கனேடிய நாடாளுமன்ற குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரோ தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இறுதி போரில் காணாமல் போனவர்களிற்கான பதிலை இலங்கை அரசு சொல்லியே ஆக வேண்டும். வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்ய போவதாக அவர் எச்சரித்துள்ளார். மேலும் மேற்குறிப்பிட்ட விடயங்களில் கனடாவுக்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில், இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றுவதில்லை எனும் தமது நிலைப்பட்டை கனேடிய பிரதமர் மீளாய்வு செய்ய மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் நீதித்துறையை சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவோருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானியாவுக்கான ஐ.நா தூதுவர் எச்சரித்துள்ளார்.

0 Responses to இலங்கை குறித்த UPR ஆய்வறிக்கை இன்று ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!