Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக் அரசு, சட்டவிரோத சுரங்க அகழ்வு குற்றச்சாட்டில், சுரங்க நிறுவனங்கள் பலவற்றுக்கு ரூ.50,000 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டாடா ஸ்டீல், எஸ்ஸெல் மைனிங், மைனெஸ் மிடீஸ்ட் மற்றும் ஒடிசா அரசினுடைய ஒடிசா மைனிங் கோர்பரேஷன் உட்பட பல்வேறு சுரங்க நிறுவனங்கள் தமக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

எனினும் இது வெறும் கண்துடைப்பு தான். ஒடிஷாவில் சுமார் ரூ 250,000 கோடி ஊழலில் சுரங்க அகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. எனினும் ரூ 58,000 கோடி வருமான இழப்பை அடுத்தே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக ஒடிசா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான கமிஷன் குழுவினர் இச்சட்டவிரோத நிலக்கரி சுரங்க அகழ்வு முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர். இந்தியா டுடே தகவல்களின் படி, இக்குழுவினர் சுந்தர்கார் மற்றும் கோஞ்ஹார் மாவட்டங்களின் 8 நிலக்கரி சுரங்க பிரதேசங்களுக்கு சென்று ஆராய்ச்சி நடத்தியதாகவும், இங்கு எல்லை மீறி அகழ்வுகள் நடைபெற்றிருப்பதை தம்மால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

0 Responses to மிகப்பெரும் சுரங்க ஊழல் மோசடி வரிசையில் இணைகிறது ஒடிசா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com