மலேசியாவில் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மூன்று கிழக்குக்கரை மாநிலங்களில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரத்தை எட்டும். எனத் தெறிகிறது.
மாநிலங்கள் வாரியாகப் பார்க்கையில் கிளந்தானில் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர். கிளந்தானில் அயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளந்தானில் முக்கியமான சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. எனினும் வெள்ளத்திற்கு இதுவரை யாரும் பலியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திரெங்கானுவில் உலுதிரெங்கானு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வெளியேற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பகாங் மாநிலத்தில் குவாந்தான், ரொம்பின், பெக்கான் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
பள்ளி விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி ஆரம்பமாகவிருக்கும் இவ்வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுட்டுள்ளது.

0 Responses to மலேசியாவின் கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் : 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு