Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தின் மூலம் மான்ய தொகை நேரடியாக வங்கிகளின் மூலம் பயனாளிகளை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்,  ஏ.டி.எம் மையங்களின் பயன்பாடு அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஏடிஎம் மையங்களை அதிகப்படுத்தும் பணியில் வங்கிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே வங்கிகள் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி, வங்கி சேவைகளை அதிகரிக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருகின்றன.  இந்த சூழலில் மத்திய அரசின் மான்யத் திட்டங்களும் நேரடியாக வங்கியை வந்து சேரும் என்பதால், ஏடிஎம் மையங்களை அதிகரிக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த நேரடி  மான்யத் தொகைத் திட்டம், மொத்தம் 51 மாவட்டங்களில் செயல் படுத்தப்  பட உள்ளது. எனவே கால அவகாசம் அவ்வளவாக இல்லாத சூழலில் வங்கிகள் தமது ஏடிஎம் மையங்கள் அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to மத்திய அரசின் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தால் ஏ.டி.எம் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com