Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலி மேற்பிராந்தியத்தில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 02-12-2012 அன்று வியல்லா நகரத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரை தமிழ் இளையோர் அமைப்பு துணை பொறுப்பாளர் செல்வி நாகேந்திரன் சிந்துஜா அவர்கள் ஏற்றிவைக்க தேசியக்கொடியினை மேற்பிராந்திய பொறுப்பாளர் திரு மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து பிராதன ஈகைச்சுடரினை இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை பொறுப்பாளர் திரு செபஸ்தியாம்பிள்ளை ராஜன் அவர்கள் ஏற்றிவைக்க அனைத்து மாவீரர் குடும்பங்களை சர்ந்தவர்களும் தங்கள் உறவுகளுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அனைத்து மக்களும் சுடர், மலர் வணக்கம் செலுத்தி அனைத்து மக்களாலும் மாவீரர் ஆணை எடுக்கப்பட்டதை தொடர்ந்து. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாவீரர் குடும்பங்களிற்கும் மதிப்பளிக்கப்பட்டு நினைவுப் பருசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு சிறப்பாக கலந்து கொண்ட நகர முதல்வர் திரு வியசேத்தி அவர்கள் உரையாற்றும் போது தமிழ் மக்கள் தங்கள் உரிமையுடன் வாழவேண்டும் அதற்காக தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கூறினார்.

கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையை நடாத்pயுள்ளது அதை சர்வதேச மட்டத்தில் விசாரிக்க வேண்டும் . தமிழ் மக்களிற்க்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களை அனைத்துக்கட்சிகளின் ஆரதவுடன் நிறைவேற்றியமைக்காகவும் தமிழீழ தேசியக்கொடியினை தமிழ் மக்களின் தேசியக்கொடியென்று அங்கீகரித்தமைக்காகவும் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து தமிழீழமும் தேசியக்கொடியும் பதிக்கப்பட்ட நினைவுப்பரிசை அனைத்து தமிழ் தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழிச்சி நடனங்கள், மாவீரர் ஞாபகார்த்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுடைய பேச்சுக்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு , சிறப்புரை, மாவீரர் நாள் அறிக்கை ,பாடல்கள்,  மனித உரிமை பணியாளர் திரு பாபியோ அவர்களுடைய உரை போன்ற நிகழ்வுகளுடள் நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் எனும் பாடலுடன் தேசியக்nகொடி இறக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் உறுதிமொழியுடன் அனைத்து நிகழ்வுகளும் சிறப்புடன் நிறைவேறின. 

0 Responses to தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012 மேற்பிராந்தியம் இத்தாலி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com