சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் தமிழ் மக்கள் வேற்றின மக்களுடன் இணைத்து தாயகத்தில் தமது உறவுகள் எதிர்கொள்ளும் இனவழிப்பை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
யேர்மனி ஆலன் நகரில் ஒவ்வொரு ஆண்டு போல இவ்வாண்டும் நடைபெற்ற சர்வதேச மனிதவுரிமை நாளில் தமிழ் மக்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான மனிதவுரிமை மீறலை விளக்கியதுடன் , குறிப்பாக இன்றைய நாட்களில் தமது உரிமைகளுக்காக போராடும் மாணவ சமூகத்தை சிங்கள அரசு மிக மோசமாக தாக்குவதை கண்டித்து ஆலன் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஆலன் தமிழாலய நிர்வாகி தனபாலசிங்கம் வைரனமுத்து இங்கு தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்தோடு இவ் நிகழ்வில் கலந்துகொண்ட நகர மதகுரு Bernhard Richter கருத்து தெரிவிக்கையில் பல்லாண்டு காலமாக தமது உரிமைகளுக்காக போராடும் தமிழ் மக்களுக்காக தனது முழு ஆதரவை தெரிவித்ததுடன் , இங்கு சென்ற ஆண்டுகள் நடைபெற்ற நிகழ்வுகளை அறிந்த சிறீலங்கா தூதரகத்தில் இருந்து தனக்கு ஓர் சந்திப்புக்கு அழைப்புதல் வந்ததாகவும் அதை அவர் உடனடியாக நிராகரித்து இலங்கை அரசு எப்பொழுது தமிழ் மக்களை அழிப்பதை நிறுத்துகின்றனரோ அதற்கு பிறகு தான் இந்த சந்திப்பை மேற்கொள்ளுவதாக பதில் தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார் . அத்தோடு இவ்நிகழ்வில் யேர்மனிய நகர மக்கள் , சர்வதேச மன்னிப்புசபை, முன்னாள் நகர பிதா அவர்களும் கலந்துகொண்டனர் .
இவ் நிகழ்வு விடையமாக ஆலன் நகர உல்லூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனி Berlin நகரத்தில் ஒரு இனத்தின் விடுதலைக்கு ஊடகத்தின் முக்கியத்துவம் எப்படி அமைகின்றது என்பதை கருப்பொருளாக கொண்டு Humbolt பல்கலைக்கழகத்தில் சர்வதேச மன்னிப்புசபை மாணவர் குழுவால் கருத்தரங்கு நடைபெற்றது .
சிறப்பாக ஈரான் நாட்டின் ஊடக சுதந்திரத்தை இவ் நிகழ்வில் முக்கியப்படுத்தப்பட்டாலும் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் சிறீலங்காவில் சிங்கள அரசு தமது இனவழிப்பை மறைப்பதற்கு ஊடகங்கள் மீது போர் தொடுத்திருப்பதை விரிவாக எடுத்துரைத்தனர் .
தகவல் :
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

0 Responses to "ஒரு இனத்தின் விடுதலைக்கு ஊடக விடுதலை அவசியம்" - யேர்மனியில் சர்வதேச மனிதவுரிமை நாள் 2012 (படங்கள், காணொளி இணைப்பு)