“தமிழீழம் கண்டிப்பாக ஒருநாள் மலரும்” என இந்தியாவிற்கு சென்றுள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினரிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
ராஜேந்திரன் தலைமையில் 33 பேர் அடங்கிய குழுவினர் கடந்த நவம்பர் 25ம் திகதி
இந்தியா சென்றனர். புதுச்சேரித் தமிழச் சங்கம் சார்பில் நவம்பர் 25ம்
திகதி மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எழுத்தாளர்கள், இன்றைய தினம் சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின்போதே தமிழ் ஈழம் கண்டிப்பாக ஒரு நாள் மலரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசியாவில் 525 தமிழ்ப் பள்ளிகளும் சிறப்பாக செயற்பட்டு வருவதற்கு தமிழ் எழுத்தாளர்கள்தான் காரணம் என பாராட்டுக்களையும் தெரிவித்தார். தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி தங்களின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியா திரும்ப உள்ளனர்.

0 Responses to “தமிழீழம் கண்டிப்பாக மலரும்”: மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடம் வைகோ உறுதி