Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக கூட்டணியில் இல்லாத தமிழக கட்சிகளுடன், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதை ஆதரிக்க தயார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் லோக்சபா தேர்தலில், மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கட்சிகளையும், தி.மு.க., கூட்டணியில், தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், மதச்சார்பற்ற கட்சிகள் ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்துவோம்.

இம்மாதம், 18ம்தேதி, மின்வெட்டை கண்டித்து, நடக்கும் அறப்போர் ஆர்ப்பாட்டம், அமைதி போராட்டமாக இருக்கும். சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.குக்கிராமங்களில் கூட கட்சி கொடிகளோடும், கட்சியினர் இந்தப் போராட்டங்களில், ஆங்காங்கு ஈடுபடுவர். சென்னையில் நடைபெறும், அறப்போர் ஆர்ப்பாட்டத்தில், நான் கலந்து கொள்வது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை.

மத்தியில் இருக்கும் மின்சாரத்தை, தென்கோடியில் உள்ள ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை, உடனடியாக செய்து விட முடியாது.தமிழகத்தின் நலனுக்காக, மத்திய அரசிடம், இந்த ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்த, தி.மு.க., தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம் எதிர்வரும் தேர்தலுக்காக திமுதிகவுடன் கூட்டணி வைப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, பார்க்கலாம் என விஜயகாந்த் பதில் அளித்திருந்தார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரும் திமுகவை பற்றி நல்லவிதமாக தற்போது பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது

0 Responses to மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமையுமாயின் ஆதரிக்க தயார்: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com