Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் கல்லூரி மாணவியை வன்புணர்ந்த  6 குற்றவாளிகளையும் தூக்கில் போட பரிந்துரை செய்ய போவதாக டெல்லி காவல்தூறை அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இச்சம்பவம்.

இது தொடர்பில் குறித்த பஸ்ஸின் ஓட்டுனர் ராம் சிங் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களை பிடிக்க, தனிப்படை காவல்துறையினர் பீகார், ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குற்றவாள்கள் 6 பேரையும் விரைவில் துக்கில் போட பரிந்துரை செய்ய போவதாக டெல்லி கமிஷனர் நீரஜ்குமார் கூறியுள்ளார். மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில், 2 வாரங்களுக்குள் அறிக்கை தரும் படி மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சு கேட்டுகொண்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இதனை அரசியலாக்குவதால் நமக்கு எதுவும் கிடைக்க போவதில்லை. குறித்த சம்பவத்தின் வலியை உணர்ந்திருந்தால் தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டனம் விடுத்துள்ளார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் ராம் சிங்குடனான விசாரணையின் போது காவல்துறையினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மானபங்கப்படுத்த முயன்ற போது ராம் சிங்கை அப்பெண் பற்களால் கடித்துள்ளார். இதையடுத்தே மேலும் கோபமடைந்து அப்பெண் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார் ராம் சிங். மேலும் அவர் குடித்திருந்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணையும், அவரது நண்பரையும் முழுவதுமாக ஆடைகளை களைந்து தூக்கி வீசவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

0 Responses to கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்: தொடரும் அதிருப்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com