போரில் இறந்தவர்களுக்காக நினைவு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதில் என்ன
தவறிருக்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டும் என நாம் கூறுவதாக தவறான கருத்து ஒன்று நிலவுகிறது. ஏனைய மாகாணங்களில் உள்ளதை போன்று இராணுவம் வடக்கு, கிழக்கிலும் இருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவே அங்கு இராணுவம் இருப்பதாக மக்கள் உணரும் படியாக அவர்களின் நடத்தை இருக்க வேண்டும் என்றே கூறுகிறோம்.
இந்த நாட்டின் அரசாங்கங்களின் தவறுகள் காரணமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு உருவானது. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கிறோம். அவர்கள் மதிக்கவில்லை. அதனால் அவர்கள் அழிவை தேடிக்கொண்டனர். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லாமல் போனது போன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை.
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறுவதற்காகவே விளக்குகளை ஏற்றினர். அது அவர்களது கடமை. கார்த்திகை தீப தினத்தில் முருகணை வழங்க அவர்களுக்கு உரிமை உள்ளது. வடக்கில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இவர்களின் மக்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு வாசிகள் என பதிவு செய்வதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரியளவில் சர்வதேச ஆதரவினை திரட்டும் பணிகளில் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னணி வகித்தார். எனினும், யுத்தத்தின் பின்னரான வடக்கின் நிலைமைகளை பார்வையிட்டால் அவர் மிகவும் வருத்தமடைவார். 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், மக்கள் அதிலிருந்து மீண்டு செல்ல வேண்டுமென விரும்புகின்றனர்.
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தேவையில்லை என்ற நிலைப்பாட்டை ஏற்றுகொள்ள முடியாது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களை விடவும் தமிழர்கள் வித்தியாசமானவர்கள் என்ற ஓர் நிலைப்பட்டை ஏற்படுத்தும் வகையில் தற்போது வடக்கு கிழக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பி உயிர் நீத்தவர்களுக்கான நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. அதனை எவரும் எதிர்ப்பதில்லை. எனினும், இறந்த மகனுக்காக, யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஓர் தாய் தீபமேற்றி நினைவு கூர்வதில் என்ன பிழையிருக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

0 Responses to போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? : நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தன் கேள்வி