Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவுக்கு எதிராக விசாரணை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள், அவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் அதில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டம் முதல் ஐந்து குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தெரிவுக்குழு முன்னர் ஷிராணி பண்டாரநாயக சமூகமளித்திருந்த போது, அவரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த தெரிவுக்குழுவினர் மறுநாளைக்குள் அதில் உள்ள விடயங்களை படித்து தமது கேள்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என கோரியுள்ளனர். எனினும் அந்த அறிக்கையை படித்துப்பார்க்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியும், இந்த தெரிவு குழு விசாரணைகள் நீதியான முறையில் நடைபெற முடியாதவை என கூறியும், ஷிராண்டி பண்டாரநாயக்க வெளிநடப்பு செய்திருந்தார். மேலும் தெரிவுக்குழுவில் இடம்பெற்ற மேலும் நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து, சபாநாயாரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது தெரிவுக்குழு. இந்த அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அதன் பினன்ர் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

மகிந்த அரசின் சில புதிய சட்டமசோதாக்களை கடுமையாக எதிர்த்து வந்த ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பாக, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சராக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், திவிநெகும திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்திருந்தார்.

இதனாலேயே அவரை பதவி நீக்கம் செய்வதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர, ராஜபக்ச அரசு முயல்வதாக ஷிராணியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இவ்விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

0 Responses to பிரதம நீதியரசர் ஷிராணி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது தெரிவுக்குழு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com